பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 04:17 pm
telugu-actor-sunil-hospitalized

தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் சுனில், நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெளியான மரியாடா ரமண்ணா படத்தில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா. அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பினார்.சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான 'அலா வைகுந்தபுரமுலோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார்.அப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது .

                                                    

இந்நிலையில் நடிகர் சுனில், சுவாசப் பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று நோய்  மற்றும் காய்ச்சல் இருப்பதாகவும், அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close