இயக்குநர் சுசீந்திரன் படுகாயம், மருத்துவமனையில் அனுமதி!!

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 04:06 pm
director-suseendhiran-met-with-an-accident-today

வெண்ணிலா கபடிகுழு மூலம் சினிமாவில் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குநர் சுசீந்தரன். தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, மாவீரன் கிட்டு, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் வாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

                                         

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய கை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 
உடனடியாக எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  உள்ளது. அவரை மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம்.அண்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் படம் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

                                                                   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close