ரயில்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழையும் கள்ளத் துப்பாக்கிகள்? - அதிரும் காவல்துறை

  முத்து   | Last Modified : 25 Jan, 2020 07:35 am
how-process-counterfeit-guns-entering-tamilnadu

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் பயன்டுத்தப்பட்ட துப்பாக்கி எர்ணாகுளத்தில் ஒரு கழிவு நீர் வாய்காலில் இருந்து  கண்டெடுக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்த ரக துப்பாக்கிகள் தமிழகத்திற்கு வந்ததது எப்படி? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. போலீசாரும் துப்பாக்கி விவகாரத்தில் கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.   

பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் துப்பாக்கி தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக ரயில்களில் கடத்தப்படுகிறது. பின்னர் சரக்கு வாகனங்களில் மாற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. 

கொல்கொத்தா, மும்பை, பாகிஸ்தானில் இயங்கி வரும் ஏஜெண்டுகள் வழியாக இவை தமிழகத்திற்குள் நுழைவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் கோரக்பூர் - கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் அதிகளவு துப்பாக்கி கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கோரக்பூர்- கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திரா வழியாக சென்னையை அடைகிறது. சென்னையை அடைந்த பின்னரே கோரக்பூர்- கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளா செல்கிறது. சென்னை புறநகரில், இந்த ரயில் நுழையும் போது கடத்திவரப்பட்ட துப்பாக்கிகள் இடம் மாறுகின்றன.

ரயிலில் இருந்து கடத்தி வரும் துப்பாக்கிகளை புறநகர்ப் பகுதிகளில் காத்திருக்கும் கும்பல், லாரி, வேன்களில் மாற்றுகிறது. இந்தியாவிலேயே பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில்தான் துப்பாக்கிகள் அதிகவிலை கொடுத்து வாங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பயிலும் வெளிமாநில கல்லூரி மாணவர்களே அதிகளவில் கடத்தல் துப்பாக்கிகளை வாங்குவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த துப்பாக்கிகளை வாங்குவதில் போதைப்பொருள் விற்கும் கும்பல்களும், அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பெருகுவதற்கு முன்பாக அதனை போலீசார் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரியும் எழுந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close