அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி  திடீர் கைது!!

  சாரா   | Last Modified : 25 Jan, 2020 09:14 am
admk-former-mp-arrested

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை,  இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை இன்று அதிகாலை போலீசார், கோவை லாலிரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர். 

அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை, விசாரணை மேற்கொள்வதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.  கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த கே.சி.பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி, இது குறித்து காவல் நிலையத்தின் அளித்துள்ள புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி  மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close