வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி! பதற வைத்த சிசிடிவி வீடியோ! வேலூரில் பரபரப்பு!

  முத்து   | Last Modified : 25 Jan, 2020 09:35 am
vellore-girl-fainted-in-class

வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காலையில், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில், லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நிவேதினி. அந்தே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிவேதினி 9ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிவேதினி, மாலை வகுப்பறை மேசையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் நிவேதினியை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று சேர்த்தனர். பின்னர், நிவேதினியின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மாணவியின் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், மாணவி, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த காட்சி, வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பாகியது. மாணவி நிவேதினியின் பெற்றோர், தங்களது மகளின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close