ரூ.532 கோடி  ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள்! சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்!

  சாரா   | Last Modified : 25 Jan, 2020 10:00 am
it-raid-in-velammal-schools

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் என கிளைகளைப் பரப்பி வந்த பிரபல வேலம்மாள் கல்விக் குழுமம் நீண்ட காலமாகவே வரி ஏய்ப்பு செய்து வருவதாக வந்த புகாரையடுத்து, வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்த இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மாணவர்களிடம் லட்சக் கணக்கில் கட்டணங்களை வசூலித்து, அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதை நடைமுறைப்படுத்தாமல், வசூலித்த பணத்திற்கு கணக்கும் காட்டாமல், தொடர்ந்து வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது  தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையில் சுமார் ரூ.532 கோடிக்கும் அதிகமாகவே வேலம்மாள் குழுமம் முறைகேடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close