92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்! மகனும், மருமகளும் கைது!

  சாரா   | Last Modified : 25 Jan, 2020 10:50 am
92-aged-women-not-attended-by-son

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் நிகோலஸ். இவரது தாயாரின் சகோதரி மிக்கேல். தற்போது 92 வயதாகும் இவர், பல வருடங்களாக நிகோலஸுடன் தான் வசித்து வருகிறார். நிகோசஸுக்கும், மிக்கேலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மனைவியுடன் சேர்ந்து கொண்டு நிக்கோலஸ், மரிய மிக்கேலை அவர்கள் வீட்டின் வெளியே உள்ள கழிப்பறையில் கொண்டு சென்று விட்டு விட்டு, அங்கேயே குளிரிலும், மழை, வெய்யிலிலும் தங்க வைத்து கொடுமை செய்து வந்துள்ளார். 

கதவுகள் இல்லாத, யாருமே பயன்படுத்த முடியாத அளவில் இருக்கும் கழிப்பறையில், மழை காலங்களில் மழை நீர் உள்ளே வருவது மட்டுமல்லாமல், கடும் குளிர் வாட்டி வதைத்த மார்கழி மாதத்திலும், பனிக் காலங்களிலும் அந்த 92 வயது மூதாட்டி அங்கேயே இருந்திருக்கிறார். இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், 92 வயதான மூதாட்டியை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்தார்.

பின்னர், வயதான மூதாட்டி என்பது குறித்து கூட கொஞ்சமும் கருணையில்லாமல் கொடூரமாக நடந்து கொண்ட மகன் மீதும், மருமகள் மீதும் சமூக நலத்துறை அளித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close