கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து..! மருத்துவமனையில் அனுமதி..!

  முத்து   | Last Modified : 25 Jan, 2020 07:04 pm
tamil-nadu-woman-stabbed-in-toronto-kin-suspect-stalker

கனடா நாட்டில் கல்லூரியில் படித்து வந்த நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவியை, மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமுற்று, அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மகள் ரேச்சல், கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள கல்லூரியில்  படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அவரை,  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  வழிமறித்தனர். பின்னர் திடீரென  கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

அவரை மீட்ட சக மாணவர்கள், அங்கிருந்த காவலாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ரேச்சல் தாக்கப்பட்டது குறித்து, குன்னூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் கனடாவிற்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு விசாவை உடனடியாக வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close