திடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து..! கோவையில் பெரும் சோகம்..  

  முத்து   | Last Modified : 26 Jan, 2020 07:51 am
government-bus-fire-in-covai

கோவையில் அரசு சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த பயணிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடி உயிர் தப்பினர். கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, தமிழக அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பதிக்குச் செல்ல இருந்தது. பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்த நிலையில், பேருந்து புறப்பட இருந்த சில நிமிடத்தில்  நேரத்தில் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறி உயிர் தப்பினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.

பயணிகள் அனைவரும் விரைவாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், பேருந்து மேற்பரப்பில் இருந்த மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close