அமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம்

  முத்து   | Last Modified : 26 Jan, 2020 09:05 am
school-van-accident-children-death

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கரடிஹள்ளியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது 3 வயது மகன் குருபிரசாத் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தருமபுரி மாவட்டம்  காரிமங்கலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நடத்தி வரும் தனியார் பள்ளி வேன், குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக அங்கு வந்தது.

அப்போது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குருபிரசாத் பள்ளி சிறுவர்களுடன் திடீரென வேனில் ஏற முயன்றப்போது சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனையறிந்து அங்கு சென்ற சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் கருதி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close