சிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்

  முத்து   | Last Modified : 26 Jan, 2020 10:01 am
father-and-son-who-raped-girl

அகமதாபாத்தில் தந்தையை இழந்த மகளை படிக்க வைப்பதாக கூறி அவரது தாயையுடன் அழைத்து வந்த 75 வயது முதியவரும், அவரது மகனும் மாறி  மாறி 3 ஆண்டுகள் பலாத்காரம் செய்த  சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் குடும்பத் தலைவன் விபத்தில் இறக்க அவரது மனைவி மற்றும் 15 வயது மகள் தவித்தனர். மகளை படிக்க வைக்க தாய் போராடி வந்தார். இதனை சாதகமாக்கிகொண்ட நிலேஷ் என்ற 75 வயது முதியவர் சிறுமியை தான் படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு இருவரையும் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்புதான் அவரது உண்மை முகம் தெரியவந்தது.

சிறுமியை மிரட்டி பலமுறை அவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தந்தையின் இந்த செயல் தெரிந்துகொண்ட அவரது 45 வயது மகன் முகேஷும் களத்தில் குதித்தார் . தானும் தன் பங்குக்கு அந்த சிறுமியை தினமும் பலாத்காரம் செய்து வந்தார் . இப்படி தந்தையும் ,மகனும் மாறிமாறி கற்பழித்ததில் அப்பெண் கர்ப்பமானார்.

அப்போது மாத்திரைகள் கொடுத்து அந்த பெண்ணின் கர்ப்பம் கலைக்கப்பட்டது. அவரது தாயாரிடம் இது பற்றி சிறுமி கூறியபோது புற்று நோயாளியான அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை . சில மாதங்களில் சிறுமியின் தாயார் இறந்துவிட தந்தை, மகனின் ஆட்டம் அதிகமானது. ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிய சிறுமி போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து வந்து அப்பா நிலேஷையும் ,மகன் முகேஷையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி தாய், தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close