கற்பழிக்கப்பட்ட மகள்! சிகிச்சை மறுத்த மருத்துவமனை! தோளில் சுமந்து சென்ற தந்தை!

  முத்து   | Last Modified : 27 Jan, 2020 09:41 am
the-little-girl-was-raped

தந்தை ஒருவர் சாலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த தனது மகளை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் ஒருவர் சில மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். பெரும்  கொடூரத்தை எதிர்கொண்ட அப்பெண் மயக்கத்துடன் கிடந்துள்ளார்.

தகவல் அடிப்படையில் அங்கு சென்ற அப்பெண்ணின் தந்தை மயங்கி கிடந்த தனது மகளை அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணால் நடக்க முடியாததால் தனது மகளுக்காக சக்கர நாற்காலி ஒன்று தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் இதில் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட கூடிய விவகாரம் அதனால் சக்கர நாற்காலி தர முடியாது என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணின் தந்தை தனது மகளை தோளில் சுமந்து சென்று சிறிது தூரத்தில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தனது மகளை காப்பாற்ற சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை இக்கொடூரத்திற்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close