சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம்  வந்த காரில் மோதி... 5 பேர் பலி! 

  முத்து   | Last Modified : 26 Jan, 2020 06:08 pm
car-accident-in-dindugal

திண்டுக்கல் மாவட்டம், தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு 58 வயதாகிறது. இவரும், இவரது மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர்கள் செல்வமைந்தன், ஜெயந்தால்மணி என 4 பேரும் சேர்ந்து கொண்டு, சாத்தான்குளம் அருகே நடைபெற இருக்கும் திருமணத்திற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை வெள்ளையன் ஓட்டிச் சென்றார்.

இன்னொரு புறம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 26 வயதான பிரகதீஷ் என்ற டாக்டர், அவருடைய பாட்டி பெரியம்மாளை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஓட்டி வந்த கார்கள், கொடைரோடு அருகே வந்துக் கொண்டிருந்த போது, எதிரெதிரே அசுர வேகத்தில் மோதிக் கொண்டன.

ஓவர் ஸ்பீடில் காரை ஓட்டி வந்த டாக்டர் பிரகதீஷ், அவருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்றை ஓவர் டேக் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணன் என்கிற 70 வயது முதியவர் மீது மோதியிருக்கிறார். அதே வேகத்தில் பிரகதீஷ் ஓட்டி வந்த கார், தறிகெட்டு ஓடி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியன் மீது மோதி, செண்டர்மீடியனையும் உடைத்துக் கொண்டு, எதிர்புறத்தில் வெள்ளையன் ஓட்டி வந்துக் கொண்டிருந்த கார் மீது அதே வேகத்தில் பயங்கரமாக மோதியது.

சினிமாவில் வரும் காட்சிகளைப் போல கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தி, அப்பளம் போல கார் நொறுங்கியது. இந்த கோர விபத்தைப் பார்த்த பொதுமக்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். 

அப்பாவியாய் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த வெள்ளையன், ஜெயகனி, செல்வமைந்தன் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பிரகதீஷ் ஓட்டி வந்த காரில் அமர்ந்திருந்த பாட்டி பெரியம்மாளும் அதிர்ச்சியில் அதே இடத்தில் உயிரிழந்தார். போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ், வசந்தா, ஜெயந்தால்மணி, சைக்கிளில் வந்த கிருஷ்ணன் ஆகியோரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சிகிச்சைப் பலனின்றி கிருஷ்ணன் மருத்துவமனையில் இறந்து விட்டார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
போலீசார், இந்த விபத்து குறித்து கொடைரோடு டோல்கேட் அருகே உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர். டாக்டர் பிரகதீஷ் மேல் தான் முழு தவறும் உள்ளதாக தெரிகிறது. முன்னால் சென்ற லாரியை வேகமாக ஓவர்டேக் செய்ய முயன்றதால் விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. அசுர வேகத்தில் சென்று, சைக்கிளில் வருபவர் மீது மோதிய சிசிடிவி காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close