அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை!

  சாரா   | Last Modified : 27 Jan, 2020 07:44 am
chengalpattu-toll-gate-fight-one-week-free

செங்கல்பட்டு அருகே அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி ஒரு வார காலத்திற்கு கட்டணமில்லாமல் இயங்கும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து (SETC)கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றியதால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.

                                                

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. 
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஓட்டுனர் சுங்கச்சாவடியின் குறுக்கே அரசுப் பேருந்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன.நெரிசலில் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதனையடுத்து தகவல் அறிந்து போலிஸார் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். 
நெரிசலில் நின்றிருந்த பல பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close