தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண்! மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க !!

  சாரா   | Last Modified : 27 Jan, 2020 09:38 am
bridegroom-cried-after-marriage

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது இன்னொரு பிறப்பு மாதிரி தான். புது இடம், புது சூழல், புது பழக்க வழக்கங்கள் என்று பிறந்து இத்தனை வருடங்களாக பழகியிருந்த நட்பு, சொந்தம், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் கணவனுக்காக துறந்து புதியதாக இன்னொரு இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள்.

அப்படி, திருமணமானதும், பிறந்த வீட்டை மறக்க முடியாமல், புகுந்த வீட்டுக்குச் செல்வதற்கு அடம் பிடித்த கல்யாணப்பெண்ணை, பொறுத்து பார்த்து, பொறுமையிழந்த மாப்பிள்ளை  தூக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

பெரும்பாலான பெண்கள், திருமணம் முடிந்து, புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது, கல்யாணமான பெண், தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கட்டி அணைத்து அழுவார்கள். அதன் பின்னர், உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டினரும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள்.  

இந்த நிலையில், வட இந்தியாவில் நடந்த திருமணம் ஒன்றில், திருமணம் முடிந்ததும், புகுந்த வீட்டுக்கு புறப்படும் மணப்பெண் தனது சொந்தங்களை பார்த்து அழுகிறார். அவரை தேற்றி போய் வருமாறு சுற்றியிருப்பவர்கள் கூறியும் அந்த பெண் கிளம்பி போகாமல் சோகமாக அங்கேயே நிற்கிறார். இதையடுத்து மணமகனோ அந்த பெண்ணை அலோக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 

கொஞ்ச காலம் கழிச்சு... ஏண்டா தூக்கிக்கிட்டு வந்தோம்னு கவலைப்பட போற’ என்று கணவனுக்கு பலரும் அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close