இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..

  முத்து   | Last Modified : 27 Jan, 2020 04:35 pm
man-kidnaps-young-girl-and-here-is-what-he-did-for-2-days

இயற்கை உபாதைக்காக சென்ற இளம்பெண்ணை கடத்திச்சென்று புதுக்கோட்டை அருகே 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அறந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நபர்  ஒருவர் அந்த இளம் பெண்ணை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

அந்த இரண்டு நாட்களும், அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.  வீட்டிலேயே தனியாக அடைத்து வைக்கப்பட்ட அந்த பெண் சத்தம் போட்டும் வெளியில் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே மகளை காணவில்லை என்று அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலைத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனது வீட்டில் அவர்களின் மகள் இருப்பதாக கூறிவிட்டு தலைமறைவாகி விட்டார்.  

அந்த வீட்டிற்கு சென்ற அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் அந்த நபரின் வீட்டில் மயங்கிக் கிடந்திருந்த இளம்பெண்ணை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டில் தங்கியிருப்பதாக கூறியதால் சாதாரணமாக கருதியதாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் பெண்ணை சித்ரவதை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே அவர்கள் அளித்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை தேடியும் வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close