பணம் வேண்டாம் ஜூஸ் வாங்கு.. cashless திட்டத்தை நவீன முறையில் பயன்படுத்தும் போலீஸ்!

  முத்து   | Last Modified : 28 Jan, 2020 08:27 am
chennai-traffic-police-get-bribe-from-motorists

தமிழகத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை(cashless ) என்ற டிஜிட்டல் முறையில் தான் அபராதம் வசூலிக்க வேண்டும். ஆனால், அதன்படி போக்குவரத்து போலீசார்  வசூலிப்பதில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து கெடுபிடிகள் சற்று அதிகமாகவே இருக்கும். அதனை சாதகமாகப் பயன்படுத்தி போக்குவரத்து போலீசார் தங்களுக்குச் சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

அதன்படி, தாம்பரம் - வேளச்சேரி மற்றும் கிழக்கு தாம்பரம் மின்வாரிய அலுவலகம் அருகே விதிமுறைகளை மீறி போலீசார் அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி விதிக்கப்படும் அபராத தொகையையும் போக்குவரத்து போலீசார் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பெறாமல் விதிக்கப்படும் அபராத தொகையில், ஒரு பகுதியை மட்டும் பணமில்லா பரிவர்த்தனையில் பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகையை வாகன ஓட்டிகளிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இதைவிட சில கொடுமை என்னவென்றால் பணத்தை வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் பெறுவது போல் அதன் அடியில் வைத்து வாங்குவதாகவும் சில நேரங்களில் மீது தொகைக்குப் பதில், ஜூஸ் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமெனப் போக்குவரத்து போலீசார் வற்புறுத்தி வருகின்றனர் எனவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close