வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..

  முத்து   | Last Modified : 28 Jan, 2020 08:29 am
men-dressed-in-police-uniform-harass-two-sisters-in-up

காவலர் சீருடையில் வந்த இருவர், வீட்டில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பிஜோய் என்ற பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் போலி மதுபானம் விற்பனை செய்வதாக கூறி வீட்டில் புகுந்த இரண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த குடும்பத்தின் இரு பெண்களை அதாவது சகோதரிகளை விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

சீருடையில் வந்தவர்களை காவலர்கள் என நம்பி, அந்தப் பெண்களும் அவர்களுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று இருவரும் சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சகோதரிகள் தங்களுக்கு நேர்ந்த கொடூமையை வீட்டில் வந்த கூறினர். அந்த குடும்பத்தினர் பிஜோய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் தங்களுடைய காவலர்கள் யாரும் அந்த பெண்களின் வீட்டிற்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் இரண்டு பேர் போலீஸ் சீருடையில் வீட்டில் புகுந்து பெண்களை விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close