பள்ளி வாகனம் உருண்டு விழுந்து விபத்து.. பள்ளி குழந்தைகள் கதறல்..

  முத்து   | Last Modified : 28 Jan, 2020 11:28 am
madurai-school-van-accident-students-injury

மதுரை அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று அதே பள்ளியில் பயிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அந்த வேனில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்து பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் அந்த வேன் மதுரை - மேலூர் அருகே சென்றப்போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே மாணவர்களை மீட்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் கூறினர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close