பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்!!

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 05:15 pm
mugan-rao-father-passed-away

தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 3 விளங்கியது. பல சர்ச்சைகளும், பரபரப்புகளும் கொண்ட எபிசோடாக திகழ்ந்ந்த இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகென் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் திடீரென மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பங்கேற்று தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் டைட்டில் வின்னரானார் முகென். இலங்கை தமிழரான முகென் ராவ் பல முகங்களை கொண்டவர் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடல் என பன்முக திறமைகளை கொண்டுள்ளவர்  முகென் ராவ்.

                                                       


இந்நிலையில் முகெனின் தந்தை பிரகாஷ் ராவ் திடீரென காலமாகியுள்ளார். திடீர் கார்டியாக் அரஸ்ட்டால் மரணமடைந்திருக்கிறார்.பிரகாஷ் ராவின் இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராவின் திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேடை பாடகரான பிரகாஷ் ராவின் மறைவு செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும் முகென் ராவின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

                                                 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close