இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்

  முத்து   | Last Modified : 28 Jan, 2020 05:14 pm
cruel-man-inserts-iron-rod-private-parts-rapes-19-year-old-girl

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் பர்தி பகுதியில் ஒரு ஆலையில் யோகிலால் ரஹாங்க்தேல் (52) என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அங்கு 19 வயது பெண் ஒருவர் தொழிலாளியாக பணிபுரிந்தார். அந்த பெண், அவரது சகோதரர், யோகிலால் ரஹாங்க்தேல் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் பர்தியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்த பெண்ணின் சகோதரரும் அவரது பெண் நண்பரும் வேலைவிஷயமாக ஜனவரி 21 ஆம் தேதி தங்கள் கிராமத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்ததால், அவரை மிரட்டி இரவு முழுவதும் ரஹாங்க்டேல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எதிர்த்தபோது, அவன் ஒரு துணியை அவள் வாயில் அடைத்தான். அதனால் அவர் மயக்கமடைந்தபிறகும், குற்றம் சாட்டப்பட்டவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அப்பெண்ணின் அந்தரங்க பகுதியில் இரும்பு கம்பியை செருகினார். 

பின்னர் ஜனவரி 24 ஆம் தேதி வந்த தனது சகோதரரிடம் இந்த பலாத்கார சம்பவத்தை அப்பெண் விவரித்தார். பின்னர் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close