சின்ன வெங்காயம் விலை அதிரடி வீழ்ச்சி! 

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 12:47 pm
slash-in-onion-price

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த வெங்காய விலை தற்போது தொடர் வரத்து காரணமாக குறையத் துவங்கியுள்ளது. 

வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர், பெரிய வெங்காயத்தின் விலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தாலும், இறக்குமதி செய்யப்படாத காரணத்தினாலும், விளைச்சல் குறைந்ததாலும் சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்திலேயே இருந்து வந்தது. நேற்று முன் தினம் வரையில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சின்ன வெங்காயம் இன்று கிலோ ரூ40 முதல் ரூ60 வரை விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close