9வது மாடியில் இருந்து விழுந்த பெண்! சாதாரணமாக எழுந்து நடந்த அதிசயம்!!

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 02:55 pm
girl-fell-from-9th-floor

அரையடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தாலே கை,கால் எலும்பு முறிந்து படுக்கையில் படுத்தவர்கள் எல்லாம் உண்டு. 9வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த பெண்மணி ஒருவர் சர்வ சாதாரணமாக அதன் பிறகு எழுந்து நடந்துச் சென்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

 

ரஷ்யாவை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், அந்த பகுதியில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறுதலாக கால் இடறி கீழே விழுந்தார். அந்த பெண் கீழே விழுந்த இடம் பனிபடர்ந்த இடமாக இருந்ததால் அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் அந்தப் பெண்ணுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஒரு சில நொடிகள் மட்டுமே அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக எழுந்து நின்று, நடந்துச் சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால், அந்த பெண் இறந்திருப்பார் அல்லது கை, கால்கள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என நினைத்து உடனடியாக அருகில் ஓடி வந்தவர்கள் திகைத்து நின்றனர். பின்னர், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலிருந்த மருத்துவமனை அழைத்து சென்றனர். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், வெறும் உள் காயங்கள் மட்டுமே அதிகளவில் இருப்பதாகவும், எலும்பு முறிவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தும், எலும்புமுறிவுகள் ஏற்படாதது மருத்துவர்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close