தமிழ்த்திரையின் பிரபல நடிகை மரணம்!  திரைப்படக் கல்லூரியின் முதல் மாணவி!

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 03:06 pm
actress-jameela-died

தமிழ் திரையுலகில், 1970களில் பெரிய ஸ்டார் நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ஜமீலா மாலிக். கறுப்பு வெள்ளை சினிமாக்களில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலால், தனக்கென தனிப்பட்ட வகையில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். பிரபலமான நடிகை என்கிற பெருமை மட்டுமல்லாது, புனே திரைப்படக் கல்லூரியின் முதல் மாணவி என்கிற பெருமையும் ஜமீலாவுக்கு உண்டு. 

1972ல் ஆத்யாதே கதா என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜமீலா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,. இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான வெள்ளி ரதம், அழகிய ராகம், நதியை தேடி வந்த காதல், லட்சுமி என ஜமீலா நடித்த பல படங்கள் இன்றளவிலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று வருகின்றன. 

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஜமீலா, கேரளாவில், சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். திரையுலகினரும், ரசிகர்களும் நடிகை ஜமீலாவின் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close