முதியோர் ஓய்வூதியம் உயர்கிறது!! 3 கோடி பேர் பயனடைவார்கள்!

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 03:18 pm
senior-citizen-pension-amount-increased

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு சார்பில் தற்போது, முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களுக்கு தற்போது, தேசிய சமுதாய உதவி திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஊரக அமைச்சகம் மூலமாக மத்திய அரசு தற்போது வழங்கி வருகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.200ம், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு தற்போது வழங்கி வரும் இந்த உதவி தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இனி, 60 வயதிற்கு மேல், 79 வயது வரையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உ தவித் தொகையாக கிடைக்கும்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் இனி ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  மத்திய அரசின் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மாற்று திறனாளிகள், விதவைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கும்  மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் உதவி தொகைகள் உயர்த்தப்பட உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close