உஷார்!! அசைவம் சாப்பிடுறீங்களா? 3 மாசத்துக்கு மறந்துடுங்க!

  சாரா   | Last Modified : 31 Jan, 2020 07:29 am
avoid-half-cooked-meats-to-get-rid-corona-virus

உலகம் முழுக்கவே பெருகி வரும் தீவிரவாதங்களை விட அதிக அச்சறுத்தலாக மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது கொரோனா வைரஸ். சீனாவில் பிறந்த இந்த கொரோனா வைரஸ், தற்போது வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.  இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளித்தாலும், உலகம் முழுக்கவே மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று இந்த கொரோனா வைரஸ் அதிவேகமாக தாக்கி, அழித்து வருகிறது. 
இன்னொரு சோகமான செய்தி, இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்துகளும், வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி, நன்றாக, முழுதாக வேக வைக்கப்படாமல் சமைக்கப்படும் அசைவ உணவுகளை உட்கொண்டால், கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் சீனாவை அதிகளவில் தாக்கியதற்கு, அவர்களின் உணவு முறையும் முக்கிய காரணமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதனால், கலக்கி, ஆஃப் பாயில் என்று கெத்தாக ஹோட்டல்களில் ஆர்டர் செய்வதற்கு முன்பாக, அதையெல்லாம் முற்றிலுமாக தவிர்த்து நன்றாக வேக வைத்த பின்னரே அசைவ உணவுகளை உட்கொள்ளுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக, இறைச்சி வகைகள், முட்டை, மீன் ஆகியவற்றை நன்றாக, முழுமையாக வேக வைத்த பின்னரே உட்கொள்ளுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  சீன உணவகங்களுக்குச் சென்று சீன உணவுகளை உண்பதை பாதுகாப்புக் கருதி சில காலங்களுக்கு தவிர்த்து விடுங்கள்.  புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகள் நல்லது. அதே போன்று, கூடுமானவரை கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடங்களைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இருமல், தும்மல், சளி, எச்சில் ஆகியவையின் மூலமாக இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது. மேற்கூறிய பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலே, இந்த  வைரஸ் பரவும் பயத்தைத் தவிர்த்து ஆனந்தமாக வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close