மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்! விளையாட்டு வினையானது!!

  முத்து   | Last Modified : 29 Jan, 2020 04:06 pm
newly-married-man-died-near-madurai

தூக்குப்போடுவது எப்படி? என்று மனைவியிடம் நடித்துக்காட்டிய புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (22). லாரி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முகமது அலி விளையாட்டாக மனைவியிடம் தூக்குப் போடுவது எப்படி? என்று நடித்துக் காட்டி இருக்கிறார்.

அப்போது நாற்காலி சரிந்து கீழே விழ, கயிறு முகமது அலியின் கழுத்தை இறுக்கியது. இதைப் பார்த்த அவரது மனைவி கத்தி, கூச்சலிட  அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் உடல்நிலை மோசமானதால் அவரை மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விளையாட்டாக செய்த சம்பவத்தால் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close