பெட்ரோல் குண்டு வீச்சு! மதுரையில் பதற்றம்!!

  முத்து   | Last Modified : 29 Jan, 2020 04:07 pm
cctv-footage-captures-alleged-petrol-bomb-attack

மதுரையில் மளிகைக் கடை உரிமையாளர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறை தேடி வருகிறது. 
மதுரை அனுப்பானடி சின்னக் கண்மாய் பகுதியைச் சேர்ந்த கணேசன், மளிகைக் கடை நடத்தி வருகிறார். மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அந்த கடை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் நேற்றிரவு கடைக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

பின்னர் அதில் ஒரு இளைஞர், கடைக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அந்த கடை தீயில் எரிந்து சாம்பலானது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் காவல்துறையினர், சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close