குழந்தைகளைக் கொன்று, கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி! போலீசார் விசாரணை!

  முத்து   | Last Modified : 29 Jan, 2020 04:09 pm
mother-kills-child-found-the-body-in-bed-box-in-chandigarh

குழந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மனைவி சென்றுவிட்டதாக கணவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலம் புரெயில் கிராமத்தை சேர்ந்தவர் தஷ்ரத் குமார். எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் இவருக்கு, ரூபா என்பவருடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி முதல் தஷ்ரத் குமாரின் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து வீட்டின் படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தைக்கு அடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் உடனே மெத்தையை தூக்கிப் பார்த்துள்ளார். அப்போது தனது குழந்தை வாயில் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற தர்ஷத், குழந்தையை கொலை செய்து விட்டு காதலனுடன் மனைவி தலைமறைவாகி விட்டதாக புகார் அளித்துள்ளார். கணவருடன் வசித்து வந்த போதும் வேறொருவரை அவரது மனைவி விரும்பி அவருடன் பழக்கத்தில் இருந்தது தெரிய வந்தது.

புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவருடன் ரூபா விருப்பமில்லாமல் வாழ்ந்ததாகவும், கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தர்ஷத்தின் மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close