கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கிய சச்சின்! குவியும் பாராட்டுக்கள்!

  சாரா   | Last Modified : 29 Jan, 2020 06:34 pm
sachin-s-cricket-academy

இந்திய கிரிக்கெட்டின் காட்பாஃதர் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் உலக அளவில், கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிகமான  சதங்களை அடித்தவர் என்பது உள்ளிட்ட பல சாதனைகளை சொந்தமாக்கியுள்ளார்.

சச்சினின் பல சாதனைகள் தற்போது தகர்க்கபப்ட்டு வந்தாலும், இன்னும் பல்வேறு சாதனைகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு சொந்தமாக தான் உள்ளன. சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடைப்பெற்ற பின்னர், பலர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதையே விட்டொழித்தனர் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் சச்சினின் ரசிகர்கள் நிறைந்துள்ளனர். 

கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், தற்போது மும்பையின் மேற்கு பகுதியில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார். 

இது பற்றி கூறும் போது, கிரிக்கெட் தான் தனக்கு வாழ்க்கையில் அனைத்தையும் அளித்தது என்றும்,  அதற்கு பிரதிபலனாக கிரிக்கெட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த அகாடமியை தொடங்கியிருப்பதாகவும், திறமையானவர்களை அடையாளங்கண்டு உருவாக்குவதே தனது குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார். சச்சினின் இந்த கிரிக்கெட் பயிற்சி அகாடமி குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close