மணமேடையில் இருந்த பெண்ணைக் கடத்தி திருமணம்!

  முத்து   | Last Modified : 31 Jan, 2020 02:40 pm
hindu-girl-abducted-from-wedding-venue-converted-married-off-in-pakistan

இந்து பெண்ணை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் மதியரி மாவட்டம் ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவர் தனது மகள் பாரதி பாய்(24) என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது, பாரதி பாய் திருமண மேடைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது, போலீசார் மற்றும் அடியாட்களுடன் வந்த ஷா ருஹு குல் என்ற இளைஞர் மணக்கோலத்தில் இருந்த பாரதி பாயை கடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது மகளை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்து ஷா ருஹு குல் திருமணம் செய்து கொண்டதாக பாரதி பாயின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், மகளை தங்களிடம் திருப்பி ஒப்படைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், பாரதி பாய் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஷா ருஹு குல்லை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பாரதி பாயை ஷா ருஹு குல் கடந்த டிசம்பர் மாதமே முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் இந்த தகவல் பாரதியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்கள் அவசர அவசரமாக வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் குறித்து அறிந்த ஷா ருஹு குல் போலீசார் உதவியுடன் மணமகள் பாரதியை திருமணம் நடைபெறும் இடத்திற்கே வந்து கடத்திச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close