நண்பர்களுடன் சேர்ந்து காதலன் திட்டம்.. காதலியை தனியே அழைத்து வந்து..? அதிர்ச்சி சம்பவம் 

  முத்து   | Last Modified : 31 Jan, 2020 10:36 am
vellore-youth-tries-to-rape-girlfriend-with-friends-gang

வேலூர் அருகே இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவரும் இளம்பெண் தன்னுடன் படித்து வரும் இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் அமிர்தி பூங்காவிற்கு செல்லலாம் எனக் கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், இன்னும் சற்று உள்ளே செல்லலாம் எனக் கூறி அவர் அந்தப் பெண்ணை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு காத்திருந்த அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்துக்கொண்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய பாய்ந்தனர். இதனால் அதிர்ந்துபோன அந்தப் பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்டு காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரையும் தாக்க முயற்சிக்க, அவர் சத்தம் போட்டு கிராம மக்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த கிராம மக்கள் அந்தப் பெண்ணை மீட்டு, அந்த கும்பலுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்த கிராம மக்கள், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. ஏற்கனவே அண்மையில் வேலூர் கோட்டையில் இளம்பெண் ஒருவர்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close