20 குழந்தைகளை பிணைய கைதிகளாக பிடித்து வைத்த போதை ஆசாமி..! சுட்டு வீழ்த்திய போலீசார்..

  முத்து   | Last Modified : 31 Jan, 2020 11:01 am
twenty-children-held-hostage

உத்தரபிரதேச மாநிலத்தில் 20 குழந்தைகள் மற்றும் பெண்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் தமது மகள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்குமாறு அப்பகுதி மக்களை அழைத்துள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளும் பெண்களும் பிறந்த நாள் பெண்ணின் தோழிகளும் என ஏராளமானோர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். திடீரென அந்த போதை ஆசாமி 20 குழந்தைகள் மற்றும் பெண்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது அவர்களை விடுவிக்க முயன்ற ஒருவரை போதை ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் போதை ஆசாமியிடம் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை மீட்க முயன்றனர். அப்போது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வந்தால்தான் 20 பேரையும் விடுவிப்பேன் என்று கூறிய போதை ஆசாமி போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.

இப்படியாக 9 மணி நேரம் போராடிய போலீசார் ஒருகட்டத்தில் அந்த போதை ஆசாமியை சுட்டுக்கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக பெண்களையும் குழந்தைகளையும் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தார், எம்எல்ஏவை எதற்கு அழைத்தார் என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close