மிரட்டும் கொரோனா - அவசர நிலையை அறிவித்த WHO..!

  சாரா   | Last Modified : 31 Jan, 2020 01:28 pm
who-declares-global-emergency-for-corona-virus

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 213 பேர் பலி மற்றும் உலகம் முழுவதும் 16 நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார அமைப்பான WHO பிரகடனப்படுத்தியுள்ளது. 

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி  உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது .சீனாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                         

இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உலக சுகாதார அமைப்பு நேற்று கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அளவிலான அவசர நிலையை அறிவித்துள்ளது. இது அரிதாகப்  பயன்படுத்தப்படும் ஒரு அறிவிப்பு ஆகும். 

                                               

இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை:-
இது குறித்து இந்திய சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர்  கூறியதாவது " அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. . ஜனவரி 15-ம் தேதியிலிருந்து சீனாவுக்கு பயணம் செய்து வந்துள்ள அனைவருக்கும் கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close