பாலியல் தொழில் நடத்திவந்த அதிமுக பெண் பிரமுகர் அதிரடி கைது..!

  முத்து   | Last Modified : 01 Feb, 2020 10:04 am
admk-woman-arrested-by-prostitution-case

அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த அதிமுக பெண் பிரமுகர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. அதிமுக மாவட்ட பிரதிநிதியான 50 வயதாகும் பிரேமா கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் பிரேமா வடமாநிலத்திலிருந்து வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே தீவிர விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டு உறுதியானதால் பிரேமா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூஜா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close