5 கிராம் நகை, ரூ.150-க்காக மூதாட்டி கொடூர கொலை..

  முத்து   | Last Modified : 03 Feb, 2020 08:21 am
youth-murdered-grandmother-5-grams-jewelery

மதுரை அருகே 5 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இளைஞர், ஒரு மாத தேடலுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மாங்குளத்தை சேர்ந்த மூதாட்டி அரசி, மேலூர் அருகே ஆண்டிபட்டியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த மாதம்  2ஆம் தேதி வந்துள்ளார். அப்போது சாலையோரம் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் காவல் நிலைய போலீசார் மூதாட்டி அரசியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்கள் அடிப்படையில் கொட்டகுடியை சேர்ந்த முத்துகருப்பன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி அணிந்திருந்த 5 கிராம் தங்க நகை மற்றும் 150 ரூபாய் பணத்துக்காக கொலை செய்யப்பட்டதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close