இரண்டு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.. ஆத்திரமடைந்த தாய்..

  முத்து   | Last Modified : 03 Feb, 2020 11:08 am
father-who-abused-his-daughters-was-arrested-under-pocso

ராமநாதபுரம் அருகே தந்தையே பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மாரிமுத்து என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று இவரது மனைவி வேலைக்குச் சென்ற சமயம் பார்த்து அவரது குழந்தைகளுக்கு வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகள்கள் வீட்டில் அழுதப்படி இருந்துள்ளனர். பின்னர் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தாயாரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை குழந்தைகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது கணவர் மீது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கீழக்கரை போலீசார், குற்றத்தை உறுதிசெய்து மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close