நடுரோட்டில் காதலர்கள் தர்ணா போராட்டம்! சேலத்தில் பரபரப்பு!!

  முத்து   | Last Modified : 04 Feb, 2020 10:15 am
couple-protest-salem-collector-office-seeking

சேலத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்ட காதலர்கள், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இதய அரசு. இவர் கல்லூரியில் படித்த போது அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த யாஷ்வினி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் காதலன் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி பலபட்டறை மாரியம்மன் கோவிலில் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.


எனினும் இதய அரசுவின் பெற்றோர்கள் இவர்களை பிரிக்க முயற்சிப்பதாக கூறி, கணவன் மனைவி இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இளம் தம்பதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து இளம் தம்பதியினர் கூறும்போது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்களை பிரிக்காமல் விடமாட்டோம் என அவர்கள் கூறுவதாகவும் கூறினர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close