கொரோனா வைரஸுக்கு மருந்து! தமிழக மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

  சாரா   | Last Modified : 04 Feb, 2020 12:22 pm
tn-student-finds-medicine-for-corono-virus

சீனாவின் இருந்து பரவ தொடங்கியிருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உலுக்கியெடுத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தும் இதுவரையில் கொரோனா வைரஸுக்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. 

இந்நிலையில் தமிழக மாணவர் ஒருவர், தனது பாட்டி சொன்ன 11 மூலிகைகளை கொண்டு கொரோனா வைரஸுக்கு குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருப்பூரில், அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவர் இசக்கிராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், எனது பாட்டி கூறிய முறைப்படி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, குணமாக்குவதற்கு 11 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்துள்ளேன். இந்த மருந்தை சாப்பிட்டால் நோய் தாக்கியவரின் மூச்சுக்குழாய், நுரையீரல் மற்றும் உணவு குழாய் ஆகியவைகள் படிப்படியாக சீராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியரின்  அனுமதியுடன் கலெக்டரிடம் நான் கண்டு பிடித்த மருந்தை கொடுத்துள்ளேன். இதை மருந்தை எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அந்த மாணவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close