3,500 பயணிகளுடன் நடுக்கடலில் கப்பல் தவிப்பு! பிடிவாதம் காட்டும் ஜப்பான் அரசு!

  சாரா   | Last Modified : 04 Feb, 2020 06:22 pm
corono-virus-update

உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பீதியில் உறைந்திருக்கின்றன. பயோ வாராக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்ததை அடுத்து பல்வேறு நாடுகள் சீனாவிற்கு விமானப் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்துள்ளது.

                                                   

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் வுஹன் நகரம் முழுவதுமே மூடப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட் மூலமே  இந்த வைரஸ் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில் டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. இந்தக் கப்பலில் 2500 பயணிகளும், 1000 ஊழியர்களும் மொத்தமாக கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் .இந்தக் கப்பலில் உள்ள 80 வயது பெரியவர் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவும் அபாயகரமான நோய். இந்த நோய் உள்ளவர்கள் தொட்ட பொருளை நாம் தொட்டாலும் இந்த வைரஸ் பரவும்.இதனால் கப்பலில் இருக்கும்  மற்ற பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இதனால் அந்த கப்பலை உள்ளே அனுமதிக்க ஜப்பான் அரசு மறுத்துள்ளது.  வேறு ஒரு கப்பலில் நடுக்கடலுக்கு சென்று குறிப்பிட்ட கப்பலில் இருக்கும் அனைவரையும் ஜப்பானின் மருத்துவர்கள்  பரிசோதித்து வருகிறார்கள்.  பரிசோதனைகள் முடிந்த பின்னரே கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close