சம்மன் வரவில்லை.. சரியாக வருமான வரி செலுத்துபவன்.. இஸ்லாமியர்களுக்கு ஆபத்தா? - ரஜினி பேட்டி

  முத்து   | Last Modified : 05 Feb, 2020 11:37 am
rajinikanth-speaks-about-caa-nrc

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘’தேசிய மக்கள் பதிவேடு அவசியம்’’ என்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  ஆதரவும் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விளக்கத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. சி.ஏ.ஏ.வால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த விவகாரத்தில்  மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சி.ஏ.ஏ.வால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான தகவல் பரப்பப்பப்படுகிறது. இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும் என ரஜினிகாந்த் கூறினார். 

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் எனக்கு சம்மன் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன். அது தொடர்பான சம்மன் எனக்கு இன்னும் வரவில்லை என விளக்கம் அளித்தார். நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை எனவும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close