நடிகர் விஜய்க்கு சம்மன்! ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் வழங்கப்பட்டது!

  சாரா   | Last Modified : 05 Feb, 2020 04:21 pm
actor-vijay-s-receives-summon-in-shooting-floors

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தைத் தயாரித்த பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக  ரெய்டு நடத்தி வருகின்றனர். 

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்க்கும் வருமான வரித்துறையினர் நேரில் சம்மன் வழங்கினார்கள்.

நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடித்து வரும் நிலையில், வருமான வரித்துறையினர் நடிகர் விஜயிடம் சம்மன் வழங்கி, அவரிடம் படப்பிடிப்பு தளத்திலேயே விசாரணையை தொடங்கியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரைத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close