உன்ன வேற யாரும் பார்க்கக் கூடாது! மனைவியின் முடியை வெட்டிய கணவன்!!

  முத்து   | Last Modified : 06 Feb, 2020 12:17 pm
hair-cut-because-she-is-more-beautiful-than-herself

உத்தரப்பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் - ரோஷ்னி தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆரிப்பை விட ரோஷ்னி மிக அழாகக இருப்பாராம். இதன்காரணமாக ஆரிப்பிற்கு தாழ்வு மனப்பான்மை உருவாகி அது நாளடைவில் சந்தேகமாக மாறியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ரோஷ்னிக்கு வெளியில் யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக ஆரிப் சந்தேகப்பட்டதே இதற்கு காரணம்.

சந்தேகம் வலுக்க மனைவியை துன்புறுத்த, ஒருகட்டத்தில் ரோஷ்னி அழகாக இருக்கக்கூடாது என்று நினைத்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி, வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தனது கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டிலிருந்து நண்பர்கள் உதவியின் மூலமாக தப்பித்த ரோஷ்னி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதாகவும் ரோஷ்னி புகார் அளித்துள்ளார். ரோஷ்னியின் புகாரை அடுத்து, போலீஸார் ஆரிப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close