திருச்செந்தூரில் இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!

  சாரா   | Last Modified : 06 Feb, 2020 08:29 pm
tiruchendur-temple-devotees-to-get-laddu-soon

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. வெளியூர்,வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தினசரி வருகை புரிகின்றனர். திருவிழாக் காலங்களிலும்,கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களிலும் ரூ20,ரூ100,ரூ250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளில் நின்று பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் ஆலயத்தில் மாசி திருவிழா, கந்தச‌‌ஷ்டி திருவிழா, ஆவணி திருவிழா, சூரசம்ஹாரம், தை பூசத் திருவிழா என நடைப்பெறும் திருவிழா காலங்களில் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிகின்றனர். இந்த விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், இலவச தரிசன வரிசை தனியாகவும், ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளும் தனித்தனியாகவும் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன் படி இனி திருசெந்தூர் ஆலயத்தில், ரூ250 கட்டணம் செலுத்தி தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு பின்னர் பிரசாதமாக பன்னீர் இலை விபூதியும், லட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தனிடம் ஆலோசித்து, விரைவில் நல்ல நாளில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close