குரூப் 4, குரூ2ஏ-வைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. கிராம நிர்வாக அலுவலா் தேர்விலும் முறைகேடு..

  முத்து   | Last Modified : 07 Feb, 2020 09:09 am
irregularities-in-rural-administration-examination

டிஎன்பிஎஸ்சி நடத்திய கிராம நிர்வாக அலுவலா் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அப்போது லஞ்சம் கொடுத்து தோச்சி பெற்ற ஒரு தேர்வரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தேர்வா்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி 813 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலா் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தேர்வில் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்து தோச்சி பெற்ற ஒருவரை பிடித்து சிபிசிஐடி அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனா். குரூப் -4, குரூப்- 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சில நபா்களே, இந்த தேர்விலும் இடைத் தரகா்களாக செயல்பட்டு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close