சேலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகும் ஈரடுக்கு மேம்பாலம்!!

  சாரா   | Last Modified : 08 Feb, 2020 07:44 am
salem-bridge-to-inuagurate-soon

440கோடி செலவில் 5 முக்கிய சாலைகளை இணைக்கும் ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கும் இந்த மேம்பாலம் பிப்ரவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாலத்தின் பணிகள்  2020அதே பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறுகிறது. மொத்தமாக 6.5கிமீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாகனங்கள் மேலே ஏறவும், 5 ரோட்டில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.  ஈரடுக்கு மேம்பாலத்தில் குரங்குச்சாவடியில் ஏறினால் புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்க ஒரு வழியும்,அதே மேம்பாலத்தில் சென்றால் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் இறங்கவும்  வழி செய்யப்பட்டு உள்ளது. ஏவிஆர் ரவுண்டானாவில் ஏறினால் சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று,ராமகிருஷ்ணா பிரிவு ரோட்டில் இறங்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close