மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு அதிகப்பட்டச தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  முத்து   | Last Modified : 08 Feb, 2020 07:38 am
court-convicted-father-who-sexually-abused-his-daughter

பெற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள எல்லபாளையத்தை சேர்ந்த குருநாதன். இவர் தனது 8 மற்றும் 7 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2016ஆம் ஆண்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குருநாதன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து குருநாதனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டபட்ட குருநாதன் 40 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close