டெல்லியை கலக்கும் சசிகலா புஷ்பா ?

  சாரா   | Last Modified : 08 Feb, 2020 06:52 pm
sasikala-pushpa-s-delhi-assignment


அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போதே, ஜெயலலிதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே பேசி, அரசியல் உலகை அதிர்ச்சி அடைய வைத்தவர் சசிகலா புஷ்பா எம்.பி.
இதனால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படவில்லை.


ஜெயலவிதா இறந்த நிலையில், அதிமுக மூன்றானது. ஒரு பக்கம், ஓ.பிஎஸ், மறுபக்கம் டிடிவி தினகரன், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி என கட்சி பிளவு பட்டது.

அப்போது, டிடிவி தினகரனுன் மட்டும் சசிகலா புஷ்பா தொடர்பு வைத்துக் கொண்டார். ஒரு முறை அவரது வீட்டிற்கு நேரிலும் சென்று வந்தார். இந்நிலையில், சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்துள்ளார். இதன் மூலம் டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி அன்கோவை தேர்தலுக்கு முன்பே, ஒருமுகப்படுத்தும் வேலை சசிகலா புஷ்பாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.


இதை அவர் வெற்றிகரமாக செய்தால், அவருக்கு மேலும் சில பதவிகள் காத்துள்ளதாக டெல்லி ஆளும் தலைமை உறுதி கொடுத்துள்ளதாம். ஆனால், இது எல்லாம் சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close