ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் துப்பாக்கி சூடு! ராணுவ வீரரின் அடாவடியால் 21 பேர் பலி!

  முத்து   | Last Modified : 09 Feb, 2020 12:58 pm
thailand-shooting-soldier-kills-21-in-gun-rampage

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் புகுந்து ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். பின்னர் அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்த மக்களை நோக்கி அவர் கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர் ராணுவ வீரரான மேஜர் ஜக்ரபந்த் தொம்மா என தெரியவந்துள்ளது. தகவலறிந்து வணிக வளாகத்திற்குள் புகுந்த பாதுகாப்புப்படையினர், அங்கிருந்த பலரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் மேலும் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பதாக கூறப்படுவதால் அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் அவ்வபோது துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவதற்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் மரணத்தை எவராலும் தவிர்க்க முடியாது என அந்த நபர் குறிப்பிட்டிருந்ததாகவும், பிறகு அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் காட்சியை அவர் பேஸ்புக்கில் ஒளிபரப்பியதாகவும் தெரிகிறது. தாக்குதலில் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை சுட்டுக்கொன்றதாக தாய்லாந்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளது. எனினும் உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close