விஜய் ரசிகர்கள் மீது போலீசார் மீண்டும் தடியடி! நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள்!

  முத்து   | Last Modified : 09 Feb, 2020 12:50 pm
police-lathi-charge-to-vijay-fans-at-neyveli

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது முதல் மாஸ்டர் களம் பரபரப்பானது. 

அதைத்தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும் படம் வெளியீடு அறிவிப்பு வெளிவரும் முன்பே தங்களுக்கு விளம்பரம் கிடைப்பதாக விஜய் ரசிகர்கள் நக்கல் செய்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து வெளியே வரும் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக படப்பிடிப்புக்கு வெளியே விஜய் ரசிகர்கள் திடீரென அதிகளவில் குவியத் தொடங்கினார். பின்னர், போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close